சமூகசேவகி மேதாபட்கர் அவர்களின் ஏற்பாட்டில், மது ஒழிப்பு பேரணியானது 02.10.2016 இன்று காலையில் கன்னியாகுமரியிலிருந்து புறப்படவுள்ளது.
இந்த பேரணியில் கலந்துகொள்ள வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள காமராசர் மணிமண்டபத்தில் காமராசர் சிலைக்கும், காந்தி மண்டபத்தில் காந்தி திருவுருப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment