காவிரி
நதி நீர் உரிமைய பறை சாற்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்க்க மறுத்து காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க முடியாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு தலை நகர் சென்னையில்
இன்று 17-10-2016 காலை ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் பெங்களூர் ரயிலை மறித்து வைகோ மற்றும் ஜி.ராமகிருஷணன் ஆகியோர் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள். மேலும் தண்டவாளத்தில் அமர்ந்தும்
ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள், காவிரி விடயத்தில் முன்பு காங்கிரசு அரசு செய்த துரோகத்தை விட தற்போதைய மோடி அரசு அதிக துரோகம் செய்கிறது. தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது என்றார்.
மறியலை தொடர்ந்து கைது செய்ய போலீசார் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அழைத்து சென்றனர். இதில் வைகோ,
ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்ய வந்த வண்டிகள் அனைத்தும் நிறைந்ததால், அடுத்த பேருந்து வருவதற்காக தலைவர் வைகோ அவர்கள் தொண்டர்களுடன்
காத்திருந்தார்.
அனைத்து தோழர்களையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்து
விட்டு கடைசியாக வைகோ மற்றும் முன்னணி நிர்வாகிகள் கைதாகினார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் சென்னை புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் இருந்தனர். தொடர்ந்து காவல்துறை கைது பற்றிய விவரங்கள் சேகரித்தார்கள்.
போராட்டக்களத்தில் மதிய உணவுக்குபின் சிறுது ஓய்வெடுத்தார் வைகோ.
தொடர்ந்து மண்டபத்திலே, மாலை நேர போராட்ட க் கள பாசறை ஆரம்பமானது. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அண்ணன் டி.ஆர்.ஆர், வடசென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் அண்ணன் திரு.டி.சி.ஆர், ஆகியோர் உரையாற்றினார்கள்.
வடசென்னை மாவட்ட கம்யூனிஸ்ட் தலைவர் ஏழுமலை உரையாற்றும்போது,
இறையாண்மை பற்றிய தலைவர் வைகோ அவர்களின் கருத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றாலும் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் நாமும் சேர்ந்து அவ்வாறே நிலைப்பாடு எடுக்க வேண்டி இருக்கிறது என்றார்.
மதிமுக மகளிரணி மாநில துணை செயலாளர் அக்கா மல்லிகா தயாளன் அவர்கள் பேசும்போது,
மக்கள் நலக் கூட்டணி யை முறியடிக்கவே திமுக முயல்கிறது. திமுக நினைத்திருந்தால் முன்பே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம் என்றார்.
இ.கம்யூனிஸ்ட் தோழர் வீரபாண்டியன் உரையாற்றும்போது, நதிகளுக்கு எல்லை கிடையாது. தண்ணீர் ஒரு நாட்டுக்கோ மாநிலத்திற்கோ சொந்தமில்லை. கைதாகி இருக்கும் நான் புழல் சிறையில் அடைக்கப்பட்டாலும் பெருமை அடைவேன். இது போன்ற தலைவர்களோடு கலந்துரையாடும் போது ஒரு தொண்டன் தலைவனாவான் என்ற நம்பிக்கை இருக்கிறது என பேசினார்.
இ.கம்யூனிஸ்ட் தலைவர் கே.எஸ் எனும் திரு.சுப்பராயன் உரை நிகழ்த்துகையில், RSS அமைப்பின் ஊதுகுழலாக மோடி அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டை அவர் நேசிக்கவில்லை. கபட நாடகம் ஆடுகிறார். ஆர்.எஸ்.எஸ் தான் நாடாளுகின்றது என சாடினார்.
ரயில் மறியல் போராட்ட உரையை தொடங்கிய வைகோ அவர்கள் இன்றைய போராட்டத்திற்கு உதவிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சிறை அனுபவங்களை பெருமை படுத்தி பேசினார்.
இனிமேல் காவிரி விசயத்தில் கர்நாடகா வுடன் பேச்சுவார்த்தை என்று ஆரம்பித்தால் அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் ஆவார்கள் என்றார்.
காவிரிக்காக பூம்புகாரில் இருந்து கல்லணை வரை நடைபயணம் மேற்கொண்டோம் காவிரிக்காக. 96லிருந்து திமுக தொடர்ந்து மத்திய அரசில் பங்கு வகித்ததே. 2007 லேயே ஆணை வந்ததே. அரசாங்க கெஜட்டில் வெளியிடவோ. மேலாண்மை வாரியம் அமைக்க திமுக முயற்சி எடுத்ததா? இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக கூட்ட ச் சொல்வது என்ன நியாயம்? எனவும் கேள்வி எழுப்பினார்.
போராட்ட வாழ்வில் களத்திலிருந்து உழைப்பின் வியர்வை சிந்த, காவரியில் மத்திய அரசின் வெளிப்படையான துரோகத்தை விவரித்து தொண்டர்களுக்கு உரையாற்றினார். மேலும் இன்று
திருமாவளவன் வராததற்கும் எழுந்த விமர்சனங்களுக்கு, தோழர் திருமா நேற்று எங்களிடம் அறிவித்து விட்டுத்தான் பேசின் பிரட்ஜ் போராட்டத்திற்கு சென்றார் என்றார் வைகோ.
மாலையில் ரயில் மறியலில் ஈடுபட்டு கைதான தலைவர் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள், தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தகவல்: திருப்பதிசாய், மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டையார்.
No comments:
Post a Comment