காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் நடுவர் மன்றம் சுட்டி காட்டியுள்ள படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து 17-10-2016 திங்கள் அன்று காலை 10:00 மணிக்கு காவிரி நதி நீர் உரிமை காக்க போராடிக் கொண்டிருக்கும் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயில் மறியல் நடைபெற இருக்கிறது.
எனவே கழகத் தோழர்கள் அனைவரும் கழக கொடியுடன் காலை9:30 மணிக்கு சென்ட்ரல் இரயில் நிலையம் அருகேயுள்ள அல்லி வணிக வளாகம் (மூர்மார்கெட்) அருகே வருகை தர வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டியக்கமும் கலந்துகொள்ளும் இந்த மிகப்பெரிய மறியல் போராட்டத்திற்கு கழக கண்மணிகளும், கூட்டணி கட்சிகளின் தோழர்களும் கொடியுடன் வருகை தந்து ரயில் மறியலை வெற்றியடைய செய்து காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment