காவிரி நதிநீர் உரிமை காக்க அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இரயில் மறியல் போராட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று12.10.2016 மாலை 6 மணிக்கு தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தெய்வசிகாமணி, செயலாளர் இரவீந்தரன், ஈரோடு மணி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தேர்தல் பணிச் செயலாளர் கே.வி.சந்தோஷ், மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், சு.ஜீவன்,கே.கழககுமார், டி.சி.இராஜேந்திரன், ப.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 17 அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலும், அக்டோபர் 18 அன்று சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலும் காலை 10 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொள்கிற இரயில் மறியல் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தோழர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர்களுடன் மறுமலர்ச்சி தி.மு.கழக தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தினை சிறப்புடன் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது என மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment