ஆண்டுகள் தோறும் நாள் தவறாது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை திராவிட திருவிழாவாக கொண்டாடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்த ஆண்டு அண்ணாபிறந்தநாள் விழாவினை தரணி போற்றும் தஞ்சையில் கொண்டாடுகிறது.
அதற்கான ஆயத்தப்பணியாக மாநாடு நடைபெறும் திடலை 08.07.2017 அன்று காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட கழகத்தின் செயல்மறவர் அண்ணன் கோ.உதயகுமார், பந்தல் விற்பன்னர் பந்தல்சிவா, மாநில விவசாய அணிச்செயலாளர் ஆடுதுறை முருகன், மாவட்ட பொருளாளர் துரைசிங்கம், தஞ்சை நகரச்செயலாளர் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்வாணன்,தஞ்சை பாஸ்கர் ஆகியோருடன் ஆய்வு செய்தார்.
தகவல்: ஜெயபிரசாந்த்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment