இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் இன்று 24-07-2017, சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற கவிக்கோ நினைவேந்தல் நிகழ்ச்சியில் கவிஞர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய கவிபேரரசு வைரமுத்து அவர்கள், வைகோ மட்டும் நெடு நாட்கள் வாழ்ந்தால், அவரை நம்பி கவிஞர்கள் மறையலாம். அவர்களது கவிதைகளை நினைவாற்றலுடன் வைகோ போற்றுவார்.
ஒரு கவிஞனுக்கு ஒரு தலைவனுக்கு இரூக்கும் போதே இரங்கற் கூட்டம் நடத்தி விடுங்களேன். அவன் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்து விட்டு போகட்டுமே.
கவிக்கோ நூல்களை வெளியிட்ட பதிப்பாளர்களுக்கே அந்த நூல் பெயர்கள் ஞாபகம் இருக்காது. ஆனால் வைகோ அவர்கள் அதை எல்லாம் வரிசைப்படுத்தி சொன்னார் என்றார்.
வைரமுத்து சொன்னது போல, வைகோ அவர்கள் கவிக்கோ அவர்களின் நூலகளின் பெயர்களையும், அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளையும் எடுத்துரைத்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment