குமரி மாவட்ட ஒன்றிய, நகர, கிளை கழகம் மற்றும் ஏனைய அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று 26-07-2017 மாலை மாவட்ட மதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் வெற்றிவேல், துணை செயலாளர் ஆனந்த ராஜன், மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி செல்வின், கோட்டாறு கோபால், குழித்துறை ஜெயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், காலம்சென்ற சம்பத் சந்திரா அவர்கள் வகித்து வந்த பொறுப்புக்கு, திரு ராபர்ட் கிங்ஸ்லி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த கூட்டத்தில் திரு. குழித்துறை அ.ஜெயராஜ், திருமதி. ராணி செல்வின், திரு. ஜேன் ஜெபர்சன், திரு . கிறிஸ்.ஜெரால்ட், திரு . கோட்டார் கோபால், மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் திரு. விவேகானந்தன், மாவட்ட பிரதிநிதி திரு. CSR மணிகண்டன், மாநில MLF துணைச் செயலாளர் திரு. சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு.அரிராமஜெயம், முன்சிறை ஒன்றிய செயலாளர் திரு.அருள்சக்கரவர்த்தி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் திரு. K ஆன்றனி மற்றும் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
இதில் மாவட்ட இணையதள அணியினர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment