Sunday, July 16, 2017

ஈரோடு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ உரை!

செயல்வீரர்கள் கூட்டம் ஈரோடு மாவட்ட கழகம் சார்பில் 16-07-2017 நடத்தப்பட்டது.

அதில் தந்தை பெரியார் பிறந்த மண்ணிற்கு வருகை தந்த தஞ்சையில் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாடும் தம்பி தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அண்ணன் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்து முதலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

பின்னர் கூட்டம் தொடங்கியது. அதில், மதுக்கடை அடைப்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டு 13 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பழ. கவுதமன் அவர்களுக்கு வைகோ பாராட்டுக்களை தெரிவித்து கைத்தறி ஆடை போர்த்தியதோடு, பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், தலைவரின் கட்டளைகளுக்கு, அவரின் வேகத்திற்கேட்ப பணியாற்றும் தலைவரின் உதவியாளர், ஓட்டுனர், மெய்காப்பாளர்கள் மற்றும் புகைபடகலைஞர் உள்ளிட்ட, பொது செயலாளரின் கண்ணிண் மணிகளுக்கு கைத்தறி வேட்டி வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த ஈரோடு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் தி.மு.க விலிருந்து விலகி ஆப்படக்கடல் கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சேகர், காளியப்பன், இராசேந்திரன், கோபால், மொடக்குறிச்சி ஒன்றிபம் மன்னாதம்பாளையம் எம்.சதீஷ்குமார் ஆகியோர் தங்களை மறுமலர்ச்சி தி.மு.க வில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.


இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுச்சி உரையாற்றினார். கழக முன்னோடிகள் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment