காவிரி தீரம் காக்கும் போராளி பேராசிரியர் ஜெயராமனின் தந்தை மறைவு! ஈமச் சடங்குகளில் பங்கேற்க ஜெயராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்-வைகோ கோரிக்கை!
மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெராமன் அவர்கள் கதிராமங்கலத்தில் அறப்போர் நடத்தியதற்காக தமிழக காவல்துறை பொய்வழக்குப் போட்டு, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தது.
பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் தந்தையார் தங்கவேலு அவர்கள் மயிலாடுதுறையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தந்தையின் ஈமச் சடங்குகளில் பங்கேற்க பேராசிரியர் ஜெயராமன் அவர்களை சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அன்னாரின் மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment