Sunday, July 9, 2017

தஞ்சை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ!

செப்டம்பர் 15 ஆம் நாள் நடக்க இருக்கிற அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டையொட்டி, நேற்று 08-07-2017 தஞ்சை மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. 

இதில் பக்கத்து மாவட்ட செயல்வீரர்கள், நிர்வாகிகள், இணையதள அணியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதில், வழக்கம் போல விசிறி சாமியார் தனது வாழ் த் தை தலைவருக்கு பச்சைத் துண்டு அளித்து தெரிவித்தார்...

பேசிய பூதலூர் ஒன்றிய செயலாளர் திரு.நந்தகுமார் அவர்கள், எனக்கு அங்கீகாரம் தந்தது மதிமுக மட்டுமே என பெருமை பொங்க குறிப்பிட்டார்.



மக்கள் பணியில் மதிமுக ஆற்றிய பணிகளை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக தஞ்சை மாநாடு அமையும் என கழகப் பொருளாளர் அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள் பேசினார்.


தஞ்சை மாநாடு மதிமுக வின் திருப்புமுனை மாநாடாக அமையும் என்ற கருத்தை கரூர் மாவட்ட செயலாளர் அண்ணன் கபினி சிதம்பரம் அவர்களும் திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களும் குறிப்பிட்டார்கள்.


ஐயா குடந்தை யானை கோவிந்தராஜ் அவர்களின் மகன் மாநாட்டு நிதியை தலைவர் வைகோ அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து கழக தோழர்களும் நிதி வழங்கினார்கள்.



அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஆறுமுகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.கவியரசன் குடந்தை தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு.பி.ஏ.அன்பு மற்றும் தொண்டரணி அமைப்பாளர் ஜான் ஆகியோர் தங்களது மாநாட்டு பங்களிப்பு பற்றி உறுதி தருகிறார்கள்.



கதிராமங்கலம் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அண்ணன் ஆடுதுறை முருகன் தகவல்



மாநில விவசாய அணி செயலாளர் திரு.ஆடுதுறை முருகன் அவர்கள் உரையில், விண்ணையும் மண்ணையும் காக்கிற வாழ்வு ரிமைப் போராளி தலைவர் வைகோ அவர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற ஆவலை தெரிவித்தார்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கல் பேசும் போது, தேக்கு மரம் சாய்ந்தாலும், அது தேக்குதான். அது உத்திரமாகப் பயன்படும். அதைப்போலத்தான் நாம் தோல்விகளைச் சந்தித்தாலும் மக்கள் பணி செய்து வருகிறோம்.

ஈழத்துக்கும் விடுதலைப் புலிகளுக்காகவும் மட்டும் மதிமுக போராடவில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும் நாம் போராடி வருகிறோம்.

திருப்பு முனையாக சிறு துரும்பு கிடைத்தால் போதும். கிடைக்காது என்று மட்டும் நினைக்காதீர்கள். தூணே கிடைக்கும் என்றார் வைகோ.


நீங்கள் அன்பாக சொன்னது மட்டுமே என் மனதில் நிற்கும் என்று பேசினார் வைகோ.


தகவல்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment