மதிமுக வடச்சென்னை கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 18-07-2017 கிரெளன் திரையரங்கு அருகில் உள்ள குளோப் திருமண மாளிகை மாலையில் தொடங்கியது.
செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர் வைகோ அவர்களுக்கு சிறப்பாக கொட்டு மேளம் அடித்து வரவேற்ற தோழர்களை அழைத்து தலைவர் பாராட்டினார்கள்..
எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் அவர்கள் பேசும்போது100 சங்கொலி சந்தாக்களை சேர்ப்போம் என உறுதி அளித்தார்
மல்லை சத்யா பேசும்போது, விலகியவர்கள் மதிமுகவில் இணைகின்ற காலம் விரைவில் வரும் என்றார்.
இதில் பகுதி செயலாளர்கள் சார்பில் மாநாட்டு நிதி வழங்கப்பட்டது.
திருவிக நகர் பகுதி சார்பாக கழகத்தில் இணைந்த இளைஞர்களை வாழ்த்தி வரவேற்றார் தலைவர் வைகோ அவர்கள்.
தென்னைமரம் நாட்பட வளர்ந்து நீண்டகால பயனை தருவது போன்றது மதிமுக என்றார் ஆர்கே நகர் பகுதி செயலாளர்
ஓர் எளிய தொண்டர் தந்த மாநாட்டு நிதியை வேண்டாம் என்று சொன்னாலும் மீண்டும் தலைவர் கைகளில் கையளித்தார் தொண்டர். நெகிழ்ச்சி யுடன் பெற்றுக்கொண்டார் தலைவர் வைகோ.
No comments:
Post a Comment