சாமளாபுரம் மதுவிலக்கு போராட்டத்தில் போராடிய மதுவிலக்கு போராளிகளுக்கு இன்று 15-07-2017 கோவை கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடந்தது.
இந்த நிகழ்வில், மதுவிலக்கே எமது இலக்கு என போராடிக்கொண்டிருக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மதுவிலக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட போராளிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
பின்னர் உரையாற்றிய வைகோ அவர்கள், போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்மணிகளின் வீரத்தை பறைசாற்றி வாழ்த்தினார். மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று சூழுரைத்தார்.
அதில் பேசிய மதிமுகவை சேராத அத்திக்கடவு போராளி திரு.வெள்ளிங்கிரி அவர்கள் பேசும்போது, அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு 14 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம்.அங்கு பல தலைவர்கள் வந்தார்கள்.ஆனால் ஐயா வைகோ வந்து சென்ற பின்பு தான் எங்களுக்குள் ஒரு அதிர்வு உருவானது. இதை அப்போது அந்த 14 பேரும் உணர்ந்தோம் என்று உணர்வுபூர்வமாக பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment