Tuesday, July 18, 2017

தாயகத்தில் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் ஏற்ப்பாட்டில் கழக ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்க நிதியளிப்பு!

பாசத்திற்கும், நேசிப்பிற்கும் உரிய அண்ணன் தாயகம் சுரேஷ் அவர்களின் மகத்தான உதவிக்கு மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

மதிமுக மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் கழகத்தில் உள்ள குடும்ப ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்க நிதியளிப்பு விழா இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், பக்ரைன் மதிமுக முன்னோடி தாயகம் சுரேஷ் முன்னிலையில் இன்று 18-07-2017 நடந்தது.


அதில் தாயகம் சுரேஷ் அவர்கள் உதவியபடி, 11 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. தாயகம் சுரேஷ் அவர்கள், தலைவரிடத்தில் ஒவ்வொன்றாக கையளிக்க, தலைவர் வைகோ அவர்களின் பொற்கரங்களால் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு இந்த உதவி கொடுக்கப்பட்டது.


இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடங்கும். இந்த நிகழ்வில் மதிமுக முன்னோடிகள், இணையதள அணி நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment