Monday, July 10, 2017

குமரி மாவட்ட கூட்டுறவு சங்கத்தலைவர் சம்பத் சந்திரா அவர்களுக்கு ஓமன் இணையதள அணி இரங்கல்!

கன்னியாகுமரி கூட்டுறவுத் தந்தையான ராமசந்திர நாடாரின் மகனும், தற்போதைய குமரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவரும், மதிமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரும், குருந்தன்கோடு மதிமுக ஒன்றிய செயலாளருமான வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள், இன்று 10-07-2017 அன்று காலை 11 மணி அளவில் உடல் நல குறைவால் காலமானார்.

சம்பத் சந்திரா அவர்கள், திமுக-வில் இருந்து வைகோ வெளியேற்றபட்டபோது, அன்று முதல் இன்று வரை வைகோவோடு பற்றுதலோடு பயணிப்பவர். பல கட்சிகளின் பேரங்களை புறந்தள்ளி கொள்கை காக்க வைகோவுடன் உலாவந்தவர்.

 சமீபத்தில் நடைபெற்ற மத்தியக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க அல்லாத ஒரு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகத் தேர்வானவர் சம்பத் சந்திரா மட்டும்தான். 

நான்கு முறை குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.


அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டி, தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு இருப்பவர். திமுக, அதிமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும், சம்பத் சந்திரா தான் குமரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவராக காணப்பட்டார்.

சம்பத் சந்திரா அவர்களின் இழப்பு, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கும், குமரி மாவட்ட மாவட்டத்திற்கும் பேரிளப்பாகும். 

இயற்கை அவரது துணைவியாரையும், குடும்பத்தையும் தேற்றட்டும். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment