மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவிலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் தமிழீழ போராளி வீரசந்தனம் அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று 31-07-2017 மாலை 5 மணி அளவில் நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது ஓவியர் வீரசந்தனம் அவர்கள் பட திறப்பதற்காக, ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் விரும்பிய ஒரே தலைவர் வைகோ அவர்கள் மட்டுமே. எனவே வைகோ அவர்கள் தான் ஓவியரின் படத்தை திறந்து வைக்க வேண்டும் என கவிஞர் காசி.ஆனந்தன் அழைக்க தலைவர் வைகோ அவர்கள் ஓவியரின் படத்தை திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீர.சந்தனம் அவர்களின் மகள் சங்கீதா அவர்கள் கண்ணீர் மல்க வருகை தந்தவர்களுக்கு நன்றி உரை வழங்கினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment