மத்திய அரசு தமிழகத்தில் துவங்க இருக்கும் நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தமிழினப் போராளி வைகோ அவர்கள் வரும் 31ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 10 ஆம் தேதி கூடலூர் வரை நடைபயணத்தை ஏற்படுத்தி அங்குள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறார்.
இதில் இளைஞர் அணி சார்பில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று (19 .03 .2018) மறுமலர்ச்சி தி மு க இளைஞர் அணியை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள், வெளியீட்டு அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன் அவர்கள், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், D C ராஜேந்திரன் , கழகக்குமார் , வழக்கறிஞர் சைதை சுப்பரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment