ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் செயல்வீரர்கள் மற்றும் கழக வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் கூட்டம் 23-03-2018 மாலை 4 மணி அளவில் ஓமன் தலைநகர் மஸ்கட், ருசைல் பார்க்கில் மின்னா மஜான் உணவகம் அருகில் நடந்தது.
இந்த செயல்வீரர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் எல்லப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் ராஜகுரு அவர்கள் முன்னிலை வகித்தார்.
கழகம் இன்றைய சூழலில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தோழமை கொண்டிருப்பது பற்றியும் அனைவராலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலை மற்றும் தலைவர் வைகோ அவர்கள் செய்த சாதனைகளை ஓரிரு வரிகளில் குறும்பதிவாக முகநூல், ட்விட்டர் பக்கங்களில் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள் பதிவிட்டு பரப்புரை செய்ய வேண்டுகோள் வைத்ததோடு, நன்றியும் தெரிவித்தார் செயலாளர் மறுமலர்ச்சி மைக்கேல் அவர்கள்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழகத்தை ஆபத்து சூழலில் இருந்து காப்பாற்றிட திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுடன் தோழமையோடு இணைந்து செயல்படும் மதிமுக தலைமை கழகத்திற்கு நன்றி கூறுவதோடு, ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை மகிழ்ச்சியுமடைகிறது.
2. தென்மாவட்டங்களை அடியோடு அழிக்க தேனி அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் மத்திய அரசின் நாசகார திட்டத்தை தடுத்து நிறுத்தி, மக்களை அழிவிலிருந்து காப்பாற்றிட விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2018 மார்ச் 31 முதல் 2018 ஏப்ரல் 9 வரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் செல்லும் நடைபயணத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்கள், நடைபயணத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்ப்படுத்திட, நடைபயணத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை வாழ்த்துதலை தெரிவிக்கிறது.
3. மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் போன்றோர் துயிலும் சென்னை மூலக்கொத்தளம் துயிலும் இல்லத்தை அழித்து மொழிப்போர் வரலாற்றையே அழிக்க, குடியிருப்பு அமைக்கிறோம் என்று சதி திட்டம் தீட்டியிருக்கும் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, கடும் எதிர்ப்பையும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
4. குரங்கணி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலையும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்யும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த கூட்டத்தில்,
1. மறுமலர்ச்சி மைக்கேல்-செயலாளர் 2.கிருஷ்ணகுமார், 3.எல்லப்பன், 4. வரதராஜ், 5.ராமமூர்த்தி 6.கண்ணன், 7. ராஜகுரு-பொருளாளர், 8. அழகுசாமி, 9.ராஜாராம்- அவைதலைவர், 10. முருகராஜ், 11.குருசாமி, 12.கிருஷ்ணமூர்த்தி, 13. மோகன்ராஜ், 14. நவநீதகிருஷ்ண, 15.ஆறுமுகம், 16.பிரபாகர், 17.ராஜ்குமார் @ ஆனந்த், 18. ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment