சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 21.06.2008 அன்று நடைபெற்ற உள் அரங்குக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமிழீழம் பற்றி பேசிய பேச்சுக்கு தேச துரோகம் என்று அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிய விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று 27.02.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வைகோ வருகை தந்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்.
No comments:
Post a Comment