பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் டெல்லி சட்டசபை நடந்த தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தினமான இன்று, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று கெஜ்ரிவால் தலமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் டெல்லி மக்கள் திரு.மோடி யின் பாரதிய ஜனதா கட்சியை ஓட விரட்டியுள்ளார்கள். பாஜக எதிகட்சி தகுதி கூட இல்லாமல் கூனி குறுகி போயுள்ளது. மக்கள் மோடியின் ஆட்சியை புறந்தள்ள தொடங்கியுள்ள நிலையில் டெல்லி தேர்தலிலும் பாஜக மிகவும் மோசமான படுதோல்வியை தழுவி மதசார்பின்மையை எடுத்து காட்டியுள்ளது, இந்து பாசிசம் இதன் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தால் சுத்தமாக துடைத்தெறியப்பட்டுள்ளது.
டெல்லி மக்களின் இந்த முடிவால மத்திய பாரதிய ஜனதா வாயடைத்துள்ள நிலையில், நெருக்கடி மிகுந்ததாகவே பாஜக வுக்கு அமைந்துள்ளது.
மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ-வின் வார்த்தை பொன் வாக்காக மறி விட்டது. இனிமேல் தமிழர்கள் மற்றும் பிற மொழி பேசும் அனைத்து மாநிலத்திலும் பாஜக தூக்கி எறியப்படும்.
டெல்லி முதலமைச்சராக பதவியேற்கும் திரு.கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பதவியேற்றபின் ஊளலற்ற நேர்மையான திறமையான மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுத்து நல்லாட்சி நடத்தவேண்டுமென்று விரும்பி கேட்டு கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment