டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தலைவர் வைகோ தொலைபேசி வாயிலாக வாழ்த்து சொல்லும் பொழுது, கெஜ்ரிவால் அவர்கள் தலைவர் வைகோவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் டெல்லியில் பிப்ரவரி 24-ம் தியதி நில கையகப்படுத்தும் மத்தியரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடகிறது. அதை முடித்துக்கொண்டு பிப்ரவரி 25-ல் உங்களை சந்திக்கிறேன் எனத்தெரிவித்தார்.
அதன்படி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான திரு. அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களை டெல்லியில் தலைமை செயலகத்தில் மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment