தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அழிவுதரும் மீத்தேன் நாசகார எரிவாயு திட்டத்தை தடுக்க பொதுச் செயலாளர் வைகோ அவர்கள இன்று மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு வைகோ அவர்கள் மீத்தேன் நாசகார எரிவாயு திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்த கருத்துகளை கேட்டறிந்தனர்.
பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை தீர்த்துகொண்டனர். மக்களின் வழ்வை அழிக்கும் மீத்தேன் நாசகார எரிவாயு திட்டத்தை வரவிடாமல் தடுக்கவும், போராட்டம் நடத்தவும் அதில் பங்கேற்கவும் பெண்கள் தயாராக உள்ளனர்.
எனவே பொதுமக்களின் நலனில் அக்கரை எடுத்து, வருங்கால சந்ததியரின் நலன் கருதி, மத்திய பாஜக அரசு மீத்தேன் திட்டத்தை கைவிட்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்படும் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment