நியூட்ரினோ நாசகார திட்டத்தை தடுக்கவும், செண்பகவல்லி தடுப்பணையை பழுதுபார்க்கவும் கோரிக்கை...
இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கொச்சின் விமான நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வு அறையில் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்களை பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். பின்னர் மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்களை வைகோ சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஏற்கெனவே மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்தை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறார். இது குறித்து கேரள அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதரவைக் கேட்பேன் என்றும் மக்கள் நலனுக்கு தேவையானதை எங்கள் அரசு செய்யும் என கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி உறுதியளித்துள்ளார். மேலும் செண்பகவல்லி தடுப்பணை பழுதுபார்க்கும் வேலையை அனுதாபத்துடன் கவனிப்பதாகவும் முதலமைச்சர் உம்மன்சாண்டி பொதுச் செயலாளர் வைகோவிடம் உறுதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்களையும் சந்திக்க இருப்பதாகவும் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு பதுகாக்கும் நடவடிக்கையை ஆட்சி பீடத்தில் இல்லாத போதே மக்கள் தலைவர் வைகோ அவர்கள் செய்கிறார். இப்படிபட்ட சேவை மனப்பான்மையும், தியாக உணர்வும் எந்த தலைவனுக்கு வரும்?
காசு இல்லை, பதவியில் இல்லை, ஆட்சிக்கு வருவோமா என உத்திரவாதம் இல்லை. இந்த நிலையிலும் மக்களுக்காக போராடுகிறாரரே... மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க சுயநலமில்லாமல் போராடுகிறாரே... தமிழக மக்களே நீங்கள் சிந்திக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில், வைகோ அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்க உங்கள் அனைவரின் வாக்குகள் இன்றியமையாதது.
வைகோ அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நீங்கள் அனைவரும் விழி திறந்து காணலாம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment