காவேரி பாதுகாப்பு இயக்க போராட்ட விளக்க பொதுக்கூட்டம் தஞ்சையில் அதன் தலைவர் வைகோ தலைமையில் இனிதே நடந்தேறியது.
இக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணசாமி வாண்டையார், தமிழ்மாநில காங்கிரசின் ராஜசேகரன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, இந்திய கம்மியூனிஸ்டு திருஞானம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன், மீத்தேன் பேரழிவு பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த லெனின் ராஜப்பா, P.R. பாண்டியன், தோழர் தியாகு உள்ளிட்ட தலைவர்களும், பொதுமக்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து தலைவர்களும் காவிரியை எப்படி தமிழகத்து தண்ணீரை கொடுக்க பாதுகாப்பது பற்றி பேசினர். மதிமுக பொது செயலாளரும், காவிரி பாதுகாப்பு இயக்க தலைவருமான திரு.வைகோ அவர்கள் காவிரி பாதுகாப்பு பற்றி எழுச்சியுரையாற்றினார். இதே ஒற்றுமையுடன் தமிழகத்தை காக்க அடுத்த கட்ட போராட்டத்திற்கு அனைத்து தலைவர்களும் தயாராகவேண்டுமென மதிமுக இணையதள அணி - ஓமன் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment