Sunday, February 8, 2015

கோவை வனக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு!!!


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் வனச்சரகர் பணியில் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், வனவர் பணியில் வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (08.02.2015) 13வது நாளாக அவர்களது அறப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவர்களது போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வனத்தை பற்றிய தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இல்லாததால் காடுகள் அழிந்து வருகின்றன. இந்நிலை நீடித்தால் வன தேவதையும், வனமும் அழிந்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில் மாணவ–மாணவிகள் பிணம் போல் கிடந்து போராட்டம் ஒருநாள் நடத்தினார்கள்.

வனவியல் மாணவ–மாணவிகள் வனப் பணியில் அமர்த்தப்பட்டால் அவர்களது கடைசித் துளி ரத்தம் உள்ள வரையில் வனத்தை பாதுகாத்து வளர்ப்பார்கள். எங்கள் கண்ணீர் துளிகளுக்கு செவிசாய்க்காத அரசு எங்களது ரத்த துளிகளுக்காவது செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையில் மரக்கன்றுகளுக்கு ரத்தத்துளிகைள சிந்தி போராட்டம் நடத்துகிறோம் என்று மாணவ–மாணவிகள் ரத்தம் சிந்தி போராட்டம் ஒருநாள் நடத்தினார்கள்.

மொட்டை போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் ஒருநாள். இதுவரை தங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்காததால் மனவேதனை அடைந்த மாணவர்கள் தூக்குமேடை ஏறும் போராட்டம் ஒருநாள் நடத்தினார்கள்.

மரக்கன்றுகளுக்கு ராக்கி கயிறு கட்டி நூதன போராட்டம் ஒருநாள் நடத்தினார்கள். ஒருநாள் வனக் கல்லூரி மாணவியர், மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் 13ம் நாளான இன்று மதிமுக வின் சார்பில் முக்கிய நிர்வாகிகள் சென்று ஆதரவை தெரிவித்தார்கள்.

வனக்கல்லூரி மாணவர்களின் இந்த வனச்சரகர் பணியில் 100 சதவீதம் ஒதுக்கீடு தொடர் போராட்டம் வெற்றியடைய வேண்டும். தமிழக அரசு தலையிட்டு மாணவர்  கோரிக்கையை ஏற்று சட்டம் இயற்றவேண்டுமென கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment