சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி இடம் மாற்றுவதை எதிர்த்து சட்டக் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதம் இருந்துவரும் சட்டக் கல்லூரி மாணவர்களை நேற்று (07.02.2015) மாலை 4.30 மணியளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து போராட்டம் வெற்றிபெற வாழ்த்தினார். வழக்கறிஞர் கோ.நன்மாறன், வேளச்சேரி மணிமாறன், ரெட்சன் சி.அம்பிகாபதி, கே.வி.மலுக்காமலி, எம்.இ.நாசர், தென்றல் நிசார், இராம.அழகேசன், எம்.எல்.எப். ஜார்ஜ், டி.ஜெ.தங்கவேலு, டி.வேணுகோபால், பி.வி.தில்லவன், பி.சுரேஷ், ஏ.ஐசக்ராஜ், டபுள்யூ.எட்வின், டி.செல்வமணி, டி.தியாகராஜன், ஏ.எஸ்.ராஜூ, தண்டபாணி, மா.பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
சட்ட கல்லூரி மாணவராக மதிமுக மாணவர் மன்ற மாநில செயலாளர் சகோதரர் சசி குமார் அவர்களும் எதிர்த்து களத்தில் உள்ளார். மாணவ செல்வங்களின் போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி, ஓமன்
No comments:
Post a Comment