மக்கள் நலக் கூட்டணி கலந்தாய்வு கூட்டம் இன்று 19-07-2016 மதிமுகவின் தலைமை கழகமான தாயகத்தில் நடைபெற்றது. கூட்டணி தலைவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பங்கேற்று விவாதிக்கப்பட்டு, மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும் என்ற முடிவுக்கேற்ப இன்று கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது, உள்ளாட்சி மன்ற தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்தே சந்திப்போம். மேயர் தேர்தல் முறை மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும். லெனினின் மரணத்திற்கு கந்து வட்டி முறையில் கல்விக்கடன் வழங்க பட்ட தே காரணம்.
அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். திருவள்ளுவரை சாக்கு பையிலே சுற்றி தரையில் கிடத்தியிருப்பது மனதிற்கு வருத்தத்தை தருகிறது. மத்திய அரசு உடன் தலையிட வேண்டும். வள்ளுவரின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து நிகழ்வுகள் முடிந்ததும், வழக்கம் போல் வாசல் வரை வந்து அனைத்து தலைவர்களையும் வழியனுப்பி வைத்தார் வைகோ.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment