தாயகம்
தங்கதுரை மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து மதிமுகம் என்ற தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளனர். அதன் வெள்ளோட்டமானது
கடந்த மாதத்திலிருந்தே ஒளிபரப்பப்பட்டது என்பதை அறிவோம். ஆனால் அதன் அதிகாரபூர்வ தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்ட நெடுஞ்சாலையில் மதிமுகம் அலுவலகத்தில்
14-07-2016 நடைபெற்றது.
காலை 10:20
க்கு மதிமுகம் தொலைக்காட்சி அலுவலகம் வந்த
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 10:47 க்கு துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா,மாவட்ட செயலாளர்கள் டி.ஆர்.ஆர்,ஜீவன் முன்னிலையில் திறந்து வைத்து
அலுவலகத்தினுள் சென்று ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். தொடக்கமாக புயல் ஒன்று
புறப்பட்டதே என்ற பாடல் ஒலித்தது.
தொடர்ந்து மதிமுகம் தொலைக்காட்சிப் பணியாளர்களுக்கான அடையாள அட்டையை வைகோ அவர்கள் அணிவித்து வாழ்த்தினார். பின்னர் செய்தி அரங்கில் அமர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வாழ்த்தினார்.
தொடர்ந்து மதிமுகம் தொலைக்காட்சி பணிகளுக்கான அலுவலத்தை வைகோ பார்வையிட்டார்.
மதிமுகம் தொலைக்காட்சி 14-07-2016 இரவு 8-00 மணி செய்திகளிலிருந்து ஒளிப்பரப்பை துவங்குகிறது. முதலில் சென்னை மற்றும் பாண்டியில் தெரியும்...இந்த மாத இறுதிக்குள் அரசு கேபிளில் இணைக்கப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் டாடா ஸ்கை(TATa SKY) யில் தெரியும். தொடர்ந்து இணையத்தில் வெப் மூலமாகவும் கைப்பேசியில் app மூலமாகவும் தொலைக்காட்சியை காண்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
உங்கள் இல்லங்களில் மதிமுகம் தொலைக்காட்சியைக் கண்டு மகிழ உங்கள் பகுதி கேபிள் ஆப்பரேட்டரைத் தொடர்பு கொள்ளுங்கள். அதை
உங்கள் இல்லங்களில் செட் செய்ய கீழ்கண்ட அலைவரிசைகளை சரிபார்த்து செட் செய்யலாம்.
Madhimugam
TV downlink parameters
Satellite:
Intelsat 17(IS17)
Orbital Location: 66 Degree East
Downlink Freq.: 3932 MHz
Polarity: Horizontal
Symbol Rate: 18330ksps
FEC: 2/3
Modulation: 8PSK/DVB-S2
Compression: MPEG-4
Orbital Location: 66 Degree East
Downlink Freq.: 3932 MHz
Polarity: Horizontal
Symbol Rate: 18330ksps
FEC: 2/3
Modulation: 8PSK/DVB-S2
Compression: MPEG-4
ஓமன்
மதிமுக
No comments:
Post a Comment