சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் அம்பேத்கர் கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள குருச்சந்திரா திருமண மண்டபத்தில் 20-07-2016 மாலை 5 மணி அளவில் மதிமுக வடசென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், 20.07.2016 இன்று மறைந்த மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவரும், மதிமுக முன்னோடிகளுள் ஒருவருமான புதுவை செ.முத்து அவர்கள் மறைவிற்கும், நமது நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இணையதள வேங்கை பொறியாளர் வடசென்னைசெல்வா அவர்களின் மறைவிற்கும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக இணையதள தோழர் வட சென்னை வடசென்னை செல்வா அவர்களின் திருவுருவப் படத்தை தலைவர் வைகோ அவர்கள் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் இணையதள அணியினர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதில் உரையாற்றிய வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜீவன் அவர்கள், 5700 கோடியை பதுக்கியதை முதன்முதலில் உலகத்திற்கு அறிவித்த தலைவர் வைகோ அவர்கள் மீதா 1500 கோடி குற்றச்சாட்டு எனவும் கேள்வி எழுப்பினார்?
துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசும்போது, அழைத்தவன் எமன் என்று அறியாமலேயே சென்று விட்டாயே கண்ணதாசா, என்று அன்று எழுதிய இரங்கற்பாவை ஞாபகபடுத்தி உரையாடினார். மோடியும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரு தட்டில் வைத்தாலும் இன்னொரு தட்டில் இருக்கும் எங்கள் வைகோவுக்கு ஈடாகாது என்றார்.
இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பொதுச் செயலாளர் வைகோ முன்னினையில் கழகத்தில் இணைந்தார்கள். அவர்களை வைகோ பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இறுதி பேருரையாற்றிய பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசும்போது, என் ஊனோடும், உதிரத்தோடும் கலந்திட்ட என் சகோதரர்கள் ஏற்படுத்திய மன ஊக்கம். என்ன தவம் செய்தேன். எந்த பிரதிபலனும் பெறாமல், காணாமல் எனக்கு அரணாக இருக்கின்ற அந்த நன்றி உணர்ச்சியோடு உங்கள் முன்னால் நிற்கின்றேன்.
நான் ஆபத்துக்களுக்கு அஞ்சியதில்லை. தோல்வியைப் பற்றி எப்பொழுதும் பெரிதும் கவலைப்பட்டதில்லை.நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று முறை தோற்றிருக்கின்றேன். இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கின்றேன். வைகோவின் கார்கள் பெட்ரோல் போடப் பணம் இல்லாமல் தேங்கி நிற்பதாக ஒரு வாரப் பத்திரிகையில் செய்தி வந்ததால்,திமுக தோழர்கள் பெருமளவு கொடுத்தார்கள்.வேலூர் மருத்துவமனையில் என் தந்தையார் கிசிக்சை பெற்ற போது, நான் செலவளிக்க யோசிக்க மாட்டேன் என்று தந்தையார் சொன்னாராம்.
ஈழத்திற்கு சென்ற பொழுது 3 என்ஜின் பொருத்திய படகை தலைவர் முதன் முதலாக சோதனை ஓட்டம் செய்தார். படகில் என்னை ஏற்றி விட வந்தவர் பால்ராஜ். ஆனையிறவு சமர்க்கள நாயகன்.நாங்கள் தொடுவாயில் இடையில் தங்கினோம்.காட்டுக்குள் இருந்த புலிகளுக்கு எள் உருண்டை தயாரித்து வைத்து இருந்தார்கள்.படகை ஓட்டியவர் பாலன். குமரப்பாவின் உடன்பிறந்த சகோதரர். இப்பொழுது இலண்டனில் இருக்கின்றார். என்னுடைய டைரியில் தலைவருடன் எடுத்த வீடியோ இருந்தது. என் மனைவி சொன்னார்கள், உங்களால் புலிகள் படகை இழந்தார்கள்.எனவே தேர்தலில் வந்த மீதம் பணத்தை புலிகளுக்கு கொடுத்து விடுங்கள் என்றார்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் துணிந்து நின்றோம்.ஆனால் பழிச்சொல் மனிதனை தாங்க விடாது. புகழுக்காக உலகைக் கொடுப்போம். என் பிறவி இப்படி ஏன் ஆயிற்று என்று தெரியவில்லை. அண்ணா அவர்கள் மீதும்,இந்த மண்ணின் மீதும் கொண்ட பற்றால் இயக்கத்தில் உழைத்தேன். கட்சியின் புகழை உயர்த்தினேன். பல ஆண்டுகள் கழித்து அவரையே கொலை செய்வதற்கு என்று கொலைப்பழி சுமத்திய பொழுது நொருங்கிப் போனேன்.தீக்குளித்தால் நீதி கேட்கின்ற போராட்டத்திற்குத் தள்ளப்பட்டேன். கொலைப்பழியை எந்த திமுகவினரும் நம்பவில்லை.
கடற்கரையில் என் கதை முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பல முறை நினைத்தேன். அப்படி நடத்திருந்தால் வரலாற்றில் எவ்வளவு பெரிய பெயர்? உடன்பிறப்பு கடிதத்தில் என்னை வர்ணித்து கலைஞர் எழுதியிருப்பார். நான் அதிகாரத்தில் இல்லை.என்னிடம் அவ்வளவு பணம் கொடுக்க என்னிடம் 1 கோடி வாக்காளார்களா இருக்கின்றார்கள். சாஞ்சி வரை படையெடுத்து சென்றான். மக்கள் மத்தியில் கம்பீரமாக நடக்கின்றானே? திட்டமிடுவதில் வல்லவர் நம்மை அழிக்க நினைப்பவர். திட்டமிட்ட ஓர் அபாண்டத்தை முகநூலில் பதிவு செய்தார்கள்.
நான் சாதாரண மனிதன்.என் மனதில் கேட்ட பொழுது கண்ணன், நான் கேள்வி பிரதானம் என்று பதில் சொல்லவில்லை.கலைஞரை நினைத்து சொல்லவில்லை.என் தாய் மீது சத்தியம் செய்தேன். என் கொடும்பாவி எரித்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை. உங்கள் மனம் இந்த பழிச்சொல்லை சுமத்திய பொழுது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? உங்கள் அன்பு தான் என்னை இயக்கும் மூலதனம்.எனக்கு என்ன சுயநலங்க இருக்கு.சிறையில் இருந்து வெளியே வந்த பொழுது நிற்கவில்லையே? கலைஞரை வீட்டில் சந்திக்க மாட்டேன் என்று சொன்ன அட்டர்னி ஜெர்னல் ஜி.ஆர் என்னை தாயகத்தில் சந்தித்தார்.ஸ்லைர்லைட் அதிபர் உங்களை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.I am very sorry Mr G.R.நான் பணத்துக்கு ஆசப்பட்டா ,உங்களுக்கு பொதுச்செயலாளராக இருக்க தகுதி இருக்காது.இதை நினைத்து என் உள்ளம் சுக்கு நூறாயிருக்கும்.
அதாவது பழிச்சொல்,தன்மானத்துக்கு இழுக்கு என்றால் உயிர் போகி விடும்.என்னுடைய சகோதரி குடும்பம் நூறாண்டாக நூற்பாலை நடத்தி வருகின்றார்கள்.டி.வி ஆரம்பிப்பது என்று சொன்னார்.நான் என்ன நினைச்சேன்.இந்த Ammapet G Karunakaran மாறி இணையத்தில் இருக்குற பம்பரம் டி.வி ன்னு நினைச்சேன்.டி.வி எப்படி வைகோ ஆரம்பிச்சாரு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நான் மந்திரியாக ஆசைப்படவில்லை.நான் மந்திரியாகாகதன் காரணம், இந்த இயக்கத்தில் கஷ்டப்படுபவன் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டும் என்று தவிர்த்தேன். பழிச்சொல்லும், நிந்தையும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் என்று தான் ஒவ்வொரு இரவும் நினைக்கிறேன்.
பாலச்சந்திரன் கொலையாக காரணமான அவர்களோடு கூட்டணி வைத்து பிச்சை எடுத்து பதவி பெற வேண்டிய அவசியம் இல்லை.போனவர்களை விடுங்க.இந்த வேதனை என் இருதயத்தை கசக்கிப் பிழிகின்றது.அவன் தோழர்களுக்காக வாழ்ந்தான்.அண்ணன் தம்பியாக பழகியவர்கள் விலகும் பொழுது தாங்க முடியவில்லை.ஒரே ஒரு ஆறுதல்.இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று.நீங்கள் என்மீது சந்தேகப்படவில்லை.என் நாணயத்தை நம்பினீர்கள்.கட்சியை நீங்கள் தான் உருவாக்கினீர்கள்.காப்பாற்றி வருகின்றீர்கள்.தோழர்களே நீங்க இருக்கீங்க. உண்மையும்,சத்தியமும் வெளிச்சத்துக்கு வரும். நம்ம என்ன தப்பு பண்ணினமா ? எங்களை அழிக்க முடியாது. உலகத்திலேயே தொண்டர்கள் உருவாக்கிய ஒரே கட்சி மதிமுக தான். இதை அழிக்க முடியாது என வைகோ பேசினார்.
No comments:
Post a Comment