மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கயத்தாறு ஒன்றியம் மற்றும் கயத்தாறு பேரூர்க் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற கீழ்குறிப்பிட்டவாறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
கயத்தாறு ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக திரு. சி. கொம்பையா பாண்டியன் (முகவரி: த/பெ. செல்லையா தேவர், நடுத் தெரு, வடக்கு இலந்தகுளம், கயத்தாறு - 628 952, தூத்துக்குடி மாவட்டம்) அவர்களும்,
கயத்தாறு பேரூர்க் கழகப் பொறுப்பாளராக திரு. உ. முருகன் (முகவரி: த/பெ. உலகு தேவர், 114-ஏ, மெயின் ரோடு, கயத்தாறு - 628 952, தூத்துக்குடி மாவட்டம்) அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
கழகத் தோழர்கள் மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள கயத்தாறு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் திரு. சி. கொம்பையா பாண்டியன் மற்றும் கயத்தாறு பேரூர்க் கழகப் பொறுப்பாளர் திரு. உ. முருகன் ஆகியோருடன் தொடர்புகொண்டு கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி கழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ஓமன் மதிமுக சார்பில் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment