பேரறிஞர் அண்ணாவின் 49-ஆவது நினைவு நாள் 03.02.2018 சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு அன்று மாலை 4.00 மணி அளவில் சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள, டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து அமைதி பேரணியானது புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்றந்தது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அண்ணா அவர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் அவை தலைவர், பொருளாளர், துணை பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர்கள், மதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment