திருக்குறுங்குடி பாலம் உடைந்து நொறுங்கியதையடுத்து பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின்னும் பாலத்தை அகற்றி மறுபாலம் கட்டாத பேரூராட்சியை கண்டித்து மறுமலர்ச்சி திமுக நெல்லை புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் தலைமையில் இன்று 21.02.2018 காலை 10 மணிக்கு திருக்குறுங்குடி பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை செய்ததில் 300 பேர் கலந்துகொண்டனர். 20 பெண்கள் உட்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க.ஒ.செ.ராஜன், CPI மாது.செ.பெரும்புடையார், CPM தாலுகா செயலாளர் வழக்கறிஞர் முருகன், வி.சி.க. அன்பு, ம.சா.ஜனதா தளம் , .செ.கந்தசாமி ச.ம.க செல்வகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்
ப.கல்லத்தியான் தொடங்கி வைக்க உணர்ச்சி முழுக்கம் காவல்துறை கெடுபிடி தகர்த்து பேரூராட்சி வாசலில் மறியல் . குற்றவாளிகளை கைது செய்க. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அடுத்த கட்ட போராட்டம். நடவடிக்கை எடுக்கத் தவறினால், தலைவர் வைகோ அவர்களின் அனுமதி பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடருவோம் என கைதுக்கு முன் நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்தின் பேட்டியில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment