2015இல் உருவாக்கப்பட்ட இந்த நியூட்ரினோ எதிர்ப்பு கூட்டமைப்பில் தற்சார்பு விவசாயிகள் இயக்கத்தின் கி.வே.பொன்னையன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் லெனின், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சுந்தர்ராசன், முல்லைப்பெரியாறு போராட்டத்தின் கள செயல்பாட்டாளர் பெருமதிப்பிற்குரிய கம்பம் அப்பாஸ், மற்றும் மே17 இயக்கம் ஆகியன இணைந்து ஐயா.வைகோ அவர்களை ஒருங்கிணைப்பு தலைவராக நியமித்திருக்கிறார்கள்.
மோடி அரசு இந்த திட்டத்தை தீவிரப்படுத்த முனைந்ததை அடுத்து தமிழக அரசு மோடிக்கு வழக்கம் போல அடிபணிய, நியூட்ரினோ பேரழிவை தமிழகத்தில் துவக்க அனுமதியளிக்க தயாராகி இருக்கிறது. இந்த திட்டம் பற்றி மக்களிடத்தில் பிரச்சாரமானது நேற்று 31/01/2018 மாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரை நடந்தது.
இந்த பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்தும் சின்னமனூரில் பாஜகவினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். இந்த எதிர்ப்பினை எல்லாம் கடந்து நியூட்ரினோவை விரட்டுவோம். தமிழினம் காப்போம் என்ற நம்பிக்கையில் பிரச்சாரம் நடந்தது.
சின்னமனூர், உத்தமபாளையம், கோம்பை,பண்ணைபுரம், தேவாரம் உள்ளிட்ட இடங்களில் பெரிய கூட்டங்கள் நடந்தது. புதுக்கோட்டை, இராஜசிங்கபுரம் போன்ற இடங்களில் வரவேற்பு நிகழ்வும் நடந்தது. அனைத்து இடங்களிலும் நியூட்ரினோ பாதிப்புகளை பற்றி மக்களிடம் எடுத்து உரைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இறுதியில் போடியில் ஏறக்குறைய 2000 பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ் அவர்கள் மிக விரிவான தகவல்களோடு அழுத்தமான உரையாற்றினார்.
No comments:
Post a Comment