Sunday, February 18, 2018

இணையதள தோழர் விக்ராந்த திருமணத்தை நடத்தி வைத்து வைகோ வாழ்த்து!

மதிமுக இணையதள பிரிவில் சிறப்பாக செயல்படும் விக்ராந்த் - ஆலிஸ் திருமண நிகழ்வு 18-02-2018 அன்று சென்னையில் நடந்தது. இதில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்துகொண்டு திருமணத்தை சுயமரியாதை முறையில் நடத்தி வைத்தார்.

மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மட்டும் மாற்றிக்கொண்டு தாலி கட்டாமல் இந்த திருமணம் பெரியாரின் உண்மையான சீர்திருத்த முறையில் நடந்தது. 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மணமக்களுக்கு உலக பொதுமறையாம் திருக்குறள் வழங்கி வாழ்த்தினார்.

மதிமுக இணையதள தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை






























No comments:

Post a Comment