பினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்கள் தனது பூர்வீக வீடு இருக்கும் இடமான மூக்கநாயக்கன்வலசு என்ற இடத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து இன்று 19-02-2018 காலையில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்த் வரவேற்றனர்.
தொடர்ந்து பினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்கள் மூக்கநாயக்கன்வலசு என்ற இடத்தில் இருக்கும் குல தெய்வ கோவில்,பூர்வீக வீடு ஆகியவற்றை பார்வையிட்டார்.
உடன் பினாங்கு நகர்மன்ற உறுப்பினர் டேவிட், சதீஸ் முனியாண்டி மற்றும் ராமசாமி அவர்களுடன் உடன் வந்தவர்கள் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடன், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment