காவிரி பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து தலைமை செயலகத்தில் இன்று 22-02-2018 நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மதிமுக சார்பாக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் கலந்து கொண்டார்.
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'காவிரி விவகாரத்தில் அரசுத் தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்க அனைவரது ஆலோசனைகளும் தேவை. அனைத்துக்கட்சித் தலைவர்கள் தங்களது ஆலோசனையை வழங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment