தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் எனது பெரு முயற்சியின் விளைவாக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று இரயில்வே பாலங்களுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றேன்.
இவற்றில் இரண்டு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. இளையரசனேந்தல் சாலையில் இரயில் பாதைக்கு அடியில் சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டதால், கோவில்பட்டி நகராட்சிப் பகுதிளான கோபால்செட்டி தெரு, ஜமீன்பேட்டை தெரு, கிருஷ்ணன்கோவில், நடராஜபுரம் தெருக்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கhன மக்கள் அன்றாடம் சென்று வர முறையான அணுகுசாலை இன்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை நேர்வழியில் எடுத்துச் செல்லவும் முடியவில்லை.
இப்பகுதியில் அணுகுசாலை அமைத்துத்தரக் கோரி பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. மறுமலர்ச்சி தி.மு.கழகமும் மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றது.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் அமைந்து உள்ள சுரங்க ரயில் பாதையை ஒட்டி முறையான அணுகுசாலையை, தமிழக நெடுஞ்சாலைத்துறை கhலதாமதம் இன்றி உடனே அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment