மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தாயார் அன்னை மாரியம்மாள் இவ்வுலகை விட்டு மறைந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த முதலாமாண்டு நினைவஞ்சலி தாயகத்தில் அனைவரும் புகழஞ்சலி செலுத்தும் விதமாக வெளிப்புறத்தில் புகைப்படம் மாலை மரியாதை செய்யப்பட்டு புகழஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், இணையதள அணின் நண்பர்கள், மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்வில் வீர வணக்க முழக்கங்கள் முடிந்த பின்னர், கீழ்க்கண்ட உறுதிமொழிகளை ஏற்றுகொண்டனர்.
மாமழை தாயே! மாரியம்மாள் அவர்களே!
பிள்ளைகளின் சொர்க்கம், தாயின் காலடியில்
என்றார் மாபெரும் தெய்வக பெருமானார்.
எம்மெல்லோரையும், பிள்ளைகளாய் பாவித்தீரே!
உன் காலடியில், எத்தனை சொர்க்கம் தாயே!
எமை விட்டு நீங்கள், தூரம் செல்லவில்லை!
உயர சென்றீர், நிமிர்ந்து சென்றீர்!
தூர சென்றீர், பொழிய சென்றீர்!
மெய்யென பெய்ய சென்றீர்!
எனினும், தமிழ்நாடு இன்னும்,
தரிசாய் கிடக்கிறதே!
தாயே!
நீங்கள் சுமந்து பிரசவித்த, உங்கள் தலைமகனே!
நிகழ்கால அரசியலில், எங்கள் கையிருக்கும்,
கடைசி உயிர் விதை!
என்னாளும் நீங்கள் உங்கள் மகன் மீது பொழியும்,
அன்பின் மழைதான் எங்கள் எதிர்கால விளைச்சல்!
உங்கள் அன்பு, இறைவன் அருளாகி பொழியும் தாயே!
அவர் மீது பொழியும் தாயே!
எம் மீதும் பொழியும் தாயே!
நாங்கள் வெல்வோம் தாயே!
அரசியலில் ஜெயிப்போம் தாயே!
தமிழ் பேசும் நிலமெல்லாம் செழிக்கும் தாயே!
No comments:
Post a Comment