மதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயாளார் தாயார் இறுதி நிகழ்வில் வைகோ!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில சிறுபன்மை பிரிவு செயலாளர் திரு.முராத் புகாரி அவர்கள் தாயார் ஷாஷிரா பஷீர் (வயது 83) நேற்று 06-11-2016 மாலை உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மறைந்து நேற்றுதான் ஒரு வரும் முடிந்துள்ள நிலையில், அதே தினத்தில் முராத் புஹாரி அவர்களின் தாயாரும் மறைந்தது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
கலிங்கப்பட்டியில் இருந்த வைகோ இன்று 07-11-2016 மதியம் சென்னை வந்தடைந்து முராத் புஹாரி அவர்களின் தாயாரின் இறுதி நிகழ்வு நடக்கும் இராயப்பேட்டை கபார்ஸ்தானில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களுடன் கலந்துகொண்டார்.
ஏற்கனவே கழக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த இறுதி நிகழ்வில் இருந்தனர்.
தாயாரை இழந்து வாடும் திரு.முராத் புஹாரி மற்றும் குடும்பத்தார் இந்த இழப்பிலிருந்து தேறி பலப்பட இயற்கையை வேண்டி ஆழ்ந்த இரங்கலை ஓமன் இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment