குமரி தொண்டர்படை துணை அமைப்பாளர் திருமணத்தில் வைகோ வாழ்த்து!
மதிமுக கன்னியாகுமரி மாவட்ட தொண்டர்படை துணை அமைப்பாளர் அஸ்வின் அவர்கள் திருமணம் இன்று 04-11-2016 காலை தூத்துக்குடியில் கூடுதாழை புனித தோமையார் தேவாலயத்தில் வைத்து நடைபெற்றது.
வரவேற்ப்பு நிகழ்வானது மாலையில் ஹெர்மன் மஹான், பொழிக்கரை நாகர்கோயிலில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண வரவேற்ப்பு நிகழ்விற்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
திருமண நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும், மணமகனின் தந்தையும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளருமான கபிரியேல் அவர்கள் வரவேற்று பேசினார்.
இந்த மண விழாவில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும், மணமக்கள் பல்லாண்டு காலம் செல்வங்கள் பல பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment