நாகை செம்பை விஜயன் அவர்களுக்கு கழக இணையதள அணி திரண்டு வாழ்த்து!
செம்பை விஜயன் அவர்கள் திருமணம் கடந்த 9 ஆம் தேதி தஞ்சாவூரில் வைத்து நடைபெற்றது. வரவேற்பு நிகழ்வு 11-11-2016 மாலை நாகை செம்பனார்கோவில் PKC திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் மதிமுக இணையதள அணியினர் சென்னையில் இருந்து இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள் தலைமையில் புறப்பட்டு சென்றனர். பாண்டி கடலூரில் அவர்களுக்கு ரமேஷ் பாபு மற்றும் ரஹமத் ஆகியோர் வரவேற்று, அவர்களும் சென்னை குழுவினருடன் நாகை நோக்கி சென்றனர்.
சீர்காளியில் மதிமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி அவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து பின்னர் கழக தோழர்கள் சிறுது ஓய்வெடுத்தனர். ஏற்கனவே திருப்பூர் மற்றும் வேறு தோழர்கள் நாகையில் விஜயன் அவர்கள் வீட்டில் சேர்ந்தனர்.
மாலையில் அனைவரும் ஒன்றாக திருமண வரவேற்ப்பு நடக்கும் மண்டம் சென்று வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்ப்பரித்து நிகழ்ச்சியை கோலாகலமாக மாற்றி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தனர். மணமக்களை வாழ்த்தி வாழ்த்து அட்டைகளையும் வழங்கி புகைப்படங்களை ஆரவாரமுடன் எடுத்துக்கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் மணமக்கள் விஜயன் ரவிசங்கரி ஆகியோருக்கு பல செல்வங்களுடன் புகழ்மாலை சூடி வெற்றி வாழ்வு நடத்திட திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment