தமிழீத்திற்காக தங்கள் உயிர்களை கொடையாக தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மறுமலர்ச்சி தி.மு,கழகத்தின் சார்பில் தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று 27.11.2016 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
தாயக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், திருமுருகன் காந்தி, ஓவியர் வீர சந்தானம், புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் தியாக தீபத்தை பற்ற வைத்து வீர வணக்க முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் தாயகத்தினுள் நிகழ்ச்சிகள் நடந்தன.
அதில் பேசிய வைகோ அவர்கள், எங்கள் இயக்க தோழர்கள் வடிகட்டப்பட்ட வார்ப்பிக்க பட்ட பிள்ளைகள் எங்கள் நிர்வாகிகள், சகோதரர்கள், சகோதரிகள்.
திலீபனுடைய மரணத்திற்கு பிறகு, திலீபன் உண்ணாவிரதம், காசி அனந்தன் கவிதைகள் கிளிப் எல்லாம் வீடியோ கேசட் போட்டு எடுத்துட்டு ஒவ்வொரு வட நாட்டு தலைவர்களுக்கும் ஒரு மணி நேர வீடியோ காமித்திருக்கிறேன்.
எம்ஜிஆர் மாதிரியே விபி சிங்க இருந்ததால் நான் பாராளுமன்றத்தில் அவரை பார்த்த போது எனக்கு பிடித்துபோய்விட்டது. அவர பாராளுமன்றத்தில் அட்டாக் செய்யும்போது எவரும் ஆதரவளிக்காமல் இருந்த போது ஒரே எம்பி நான் மட்டுமே ஆதரித்தேன்.
அவர் பிரதமர் ஆனதும் என்னை கேபினட் மினிஸ்டர் ஆக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதை சங்கர் தயாள் சர்மாதான் சொன்னார். அவருக்கு என் மேல் ரொம்ப பிரியம்.
பார்லிமன்ட்டில் கூட்டம் தொடங்கும் மதல் கேள்விக்கு முன்னர் அனைவரும் அமர்ந்தனர். அப்போது நான் எழுந்தேன். கேள்வி நேரம் கூடாது. எங்க மக்கள் கொல்லப்படுகிறார்கள் இந்திய ராணுவத்தால். சங்கர் தயாள் சர்மா முதல் நாளாக வந்ததும் விடுவிடுத்து போனார். காங்கிரஸ் காரர்கள் கேள்வியை நேரம் என சொன்னார்கள்.
எங்கள் வாழ்வே கேள்விகுறியாகிவிட்டது. எதற்கு கேள்வி நேரம். பல எம்பிக்கள் வந்து சமாதானம் செய்தனர். 15 நிமிடம் சபையை நடத்தவிடவில்லை. பின்னர் சபையை விட்டு வெளியேற்றப்பட்டேன். என் 24 ஆண்டு கால நாடாளுமன்ற வாழ்க்கையில் அன்றுதான் நான் வெளியேற்றப்பட்டேன்.
முத்தமிழறிஞர் என்று நான்தான் எழுதி சங்கர்தயாள் சர்மாவிடம் கொடுத்தேன். அதைதான் பாராட்டு விழாவில் அதை பேசினார். விபி சிங், மந்திரி பதவிதான் என்னால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அரசு பதவி தருகிறேன் என்றதற்கு அதை மறுத்தவன். உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றேன்.
பின்னர் ஈழத்தில் போர் நடந்துகொண்டிருந்த போது ஆயுத லிஸ்ட் கொடுத்தேன். அப்போது விபி சிங் என் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்னால் ஆயுதம் கொடுக்க இயலாது. அப்படியென்றால் மருந்து கொடுங்கள் என்றேன். கண்டிப்பாக செய்கிறேன் என்றார் விபி சிங்.
விபி சிங் ஆட்சியின் போது இலங்கைக்கு மருந்து உதவி செய்ய இருந்ததை தடுத்தது திமுக என்றார். ஆதாரம் என்னிடம் உள்ளது.
நான் விடுதலைபுலிகள் இயக்கத்தின் அங்கம் என சொல்லி எனக்கு எந்த நாட்டிற்கும் விசா கொடுப்பதில்லை.
ரோடு போடவும், பாலம் கட்டவும் மந்திரி என்றால் அதை அனைவரும் செய்யலாம். ஆனால் ஒரு இனத்திற்கு என் வாழ்வு பயன்படுமானால் அதற்கு நான் பயன்படுவேன்.
தமிழனுக்கு ஒரு தேசம் அமைய என் உழைப்பும், பேச்சும் பயன்படுமானால் அதற்கு நான் பாடுபடுவேன். அந்த உறுதியோடு வந்தவர்கள்தான் அத்தனை மாவட்ட செயலாளர்களும் தோழர்களும்.
நானும் சயனைடு குப்பியை கழுத்தில் அணிந்தவன்தான். வைகோ சாதாரணமானவனல்ல. அவனும் விடுதலை புலிதான்.
சோனியாகாந்தி எழுதிய கடிதம்தான் என் வாழ்நாளில் தலை சிறந்தது என்று சொன்னவர் கருணாநிதி. ஆனால் எனக்கு தலைவர் பிரபாகரன் எழுதிய பாராட்டுதான் சிறந்தது. தனி மனித ஒழுக்கம் பிரபாகரனிடம்தான் இருந்தது. வேறெந்த தலைவர்களுக்கும் இல்லை.
மாவீரர்கள் நாள் என்பது உறுதி எடுத்துக்கொள்வதற்காக. பிரபாகரன் மகன் ஆண்டனி, மனைவி மதிவதினி, மகள் துவாரகா யுத்த களத்திலே மடிந்தனர். பிரபாகரன் தன் குடும்பத்தையே தமிழினத்திற்காக தியாகம் செய்திருக்கிறார்.
நாம் ஒரு லட்சம் இளைஞர்கள் தயாரானால் போதும். இந்த பொதுவாக்கெடுப்பு யோசனை நான் ஆழ்ந்து யோசனையில் பிரசல்ஸில் வைத்து வந்தது.
நான் 3 தடவை ஆபத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன். இது சுதந்திர தமிழீழ தேசம் அமைத்து காட்டுவதற்கு ைஇயற்கை அன்னை என்னை உயிரோடு வைத்திருப்பதாக கருதுகிறேன். மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்று சிறப்புரையாற்றினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
கழக முன்னணி நிர்வாகிகளான, ஆ.வந்தியத்தேவன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். தலைமை -சு.ஜீவன், தொகுப்புரை -ஆவடி அந்திரிதாஸ், நன்றியுரை- தென்றல் நிசார் பங்கேற்றோர். ஜி.தேவதாஸ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டி.சி.இராசேந்திரன், கே.கழகுமார், ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், இ.வளையாபதி, முராத் புகாரி, கோ.நன்மாறன், கோமகன், நவநீதகிருஷ்ணன், மல்லிகா தயாளன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment