தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் இன்று 26-11-2016 உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
சென்னை எழும்பூரிலும் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், காலை 10 மணி அளவில், கழக துணைப் பொதுசெயலாளர் மல்லை சத்யா அவர்கள் முன்னிலையில் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில், ஓவியர் வீர.சந்தானம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு தாயகத்தின் வெளி சுவரில் அனைவரும் பார்க்கும்படியாக பிரபாகரன் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதை காவல்துறை அகற்ற நினைத்தும், தடைகளை மீறி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவர் மற்றும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஓமன் இணையதள அணி
No comments:
Post a Comment