சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நாளை 20-11-2016 ஆம் தேதி திராவிட இயக்க நூற்றாண்டின் நிறைவு விழா நடைபெற இருக்கிறது.
மாலை 5 மணி அளவில் தொடங்கும் நிகழ்விற்கு மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகிக்கிறார். கழக சட்டதுறை செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
நிகழ்ச்சியை கழக கொள்கை விளக்க செயலாளர் வழக்கறிஞர் அழகுசுந்தரம் தொகுத்து வழங்குகிறார். வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் நன்றியுரை நிகழ்த்த , திராவிட இயக்கத்தின் பெருமைகளை பேருரையாக நிகழ்த்துகிறார், உண்மையான திராவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
கழக கண்மணிகளே வைகோவின் வாயிலிருந்து விழும் திராவிட கொள்கைகளை உங்கள் காதுகளில் ரீங்காரமிட வாருங்கள் படையெடுத்து. உண்மையான திராவிட இயக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment