Thursday, November 24, 2016

"ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும்" நூலை வெளியிட்டார் வைகோ!

நளினி அவர்கள் எழுதி ஏகலைவன் அவர்கள் தொகுத்து இருக்கின்ற "ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும்" என்ற தலைப்பில் உள்ள நூலை, இன்று 24.11.2016 வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில், சென்னை வடபழநி ஆர்கேவி ஸ்டுடியோ அரங்கில் (விஜயா கார்டன் உள்புறம்) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட பத்மாவதி அம்மாள், திருமாவளவன், பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதில் பேசிய வைகோ அவர்கள், தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு இந்த நூல் கொண்டு செல்லப்பட வேண்டும். அந்த அளவிற்கு இந்த நூலில் அடங்கியிருக்கிறது. ரகோத்தமனின் அயோக்கியத்தையும், நளினிக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரித்து பேசினார். நான் அரசுத்தரப்பு 250 வது சாட்சியாக நிறுத்தப்பட்டவன் இராஜிவ் காந்தி கொலைவழக்கில் எனவும் நினைவுகூர்ந்தார். 

நான் நெஞ்சில் பூசிக்கும் தலைவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே. இனத்துக்காகவும் தமிழ் மண்ணிற்காகவும் இறுதி வரை இருப்பேன். வேலூர் சிறைச்சாலையில் சீமான் அடைக்கப்பட்ட போது நானும் அண்ணன் நெடுமாறனுடன் சென்று பார்த்தோம். 

ராம்ஜெத்மலானி அவர்கள் மூவர் தூக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகி தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அளவிற்கு வாதாடி 2014 பிப்ரவரி 18 மூவரின் தூக்குத் தண்டனை இரத்து என்ற செய்தியை நீதிமன்றம் அறிவிக்க செய்ய காரணமாக இருந்தார் எனவும் விரிவாக விளக்கினார்.  

துரோகங்களும் வரலாற்றில் பதியப்படும், தியாகங்களும் வரலாற்றில் பதியப்படும். முதலமைச்சர் பூரண நலம் பெற்று வர வேண்டுகிறேன். பூரண நலம் பெற்று மீண்டும் வந்த பின்னர் முதலமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இராஜிவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் எனவு பேசினார்.
 

உணர்ச்சியுள்ள இளைஞர்கள் ஒன்று கூட வேண்டும். இளைஞர்கள் ஒன்று கூடி சுதந்திர தமிழீழத்தை பெற்றுத் தர வேண்டும் எனவும் இளைஞர்களிடத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் தமிழீழ ஆதரவாளருமான வைகோ அவர்கள் வேண்டுகோள் வைத்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment