மதிமுக சார்பில் இன்று 20-11-2016 மாலை 6 மணி அளவில் செனை எழும்பூர் சிராஜ் மஹாலில் திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்விற்கு பங்குபெற கழக கண்மணிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்ததால், இருக்க இடமின்றி அரங்கின் வெளியிலும் கழகத் தோழர்கள் பொதுமக்களுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.
இதில் அரங்கின் ஒரு பகுதியை மறுமலர்ச்சி திமுக மகளிர் அணியினர் அலங்கரித்திருந்தது பெருமையடைய வைத்தது.
விழாவில் நினைவில் வாழும் திராவிட இயக்க தலைவர்களின் புகைப்படங்களுக்கு மாலை மரியாதை செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வுகள் தொடங்க, ஆவடி அந்தரிதாஸ் தொகுத்து வழங்கினார். ஜீவன் மும்மொழிய, கழக குமார் அவைதலைவர் திருப்பூர் துரைசாமி அவர்களை தலைமை தாங்க வழிமொழிந்தார்.
முன்னணி தலைவர்கள் குறைந்த நேரம் மட்டுமே உரை நிகழ்த்தி சிறப்பு பேருரை நிகழ்த்திய தலைவர் வைகோ அவர்களுடைய செய்தியை கேட்க குறைவான நேரத்தில் நிறைவாக பேசினார்கள்
அதில் பேசிய கழக அமைப்பு செயலாளர் திரு.வந்தியத்தேவன் அவர்கள், திரு.நடேசனார் அவர்கள்தான் அனைத்து மாணவர்களும் தங்கும் விடுதி வசதி செய்து கொடுத்தார் என நினைவுகூர்ந்தார்.
கழக அவைத் தலைவர் ஐயா திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையுரையாற்றும்போது, திராவிட இயக்கத்தின் சாதனைகளை நீங்கள் படித்திருப்பீர்கள். நான் அனுபவித்து உணர்ந்தவன் என உணர்ச்சிபட பேசினார்.
நிகழ்சி பேருரை நிகழ்த்திய திராவிட இயக்கத்தின் உண்மையான கையிருப்பு வைகோ அவர்கள் உரையாற்றுகையில், திராவிட இயக்கத்தின் தோற்றுவாய்களுள் ஒருவரான டி. மாதவன் நாயர் அவர்களுக்கு அரசிடம் இடம் கேட்டுப் பெற்று மதிமுக செலவில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்.
கறுப்பு பணம் வெளிக் கொணர அறிவிப்பு வந்த உடனேயே வரவேற்றோம். அன்று எங்களுக்கு நிம்மதியான தூக்கம் வந்தது. புது நோட்டுகளில் தேவநாகரி எழுத்துகளை திணித்தது கண்டிக்க தக்கது. நல்லது செய்தால் வரவேற்போம்.
திமுக போன்ற கட்சிகளை உறுத்த வைக்கவாவது மதிமுக போராட்டங்களும் முன்னெடுப்புகளும் உதவட்டுமே. 28 ஆம் தேதி திமுக நடத்தும் கூட்டத்தைப் பற்றி தலைவர் வைகோ தெரிவித்தார்.
டெல்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது, வாஜ்பாய் அவர்களிடம் பேசி நகரின் மையப்பகுதியில் புது இடம் பெற்று தந்தது மதிமுக எனவும் வைகோ கடந்தகால வரலாற்றை விளக்கினார்.
மலையாள, கர்நாடகா, ஆந்திரா அடங்கியது மதராஸ் ராஜதானியாக இருந்தது. அதனால்தான் திராவிடன் என்றழைத்தார்கள். தெலுங்கு, கன்னட மொழிகள் தமிழிலிருந்து உதித்தவை தானே? அதே போல் திராவிட இயக்க சாதனைகளை மறைக்க முடியாது என்றார். எனவே தமிழ்த்தேசியம் எங்களுக்கு முரண் அல்ல. அந்த சகோதரர்களை நாங்கள் வெறுக்கவில்லை என்பதை கரூர் மாநாட்டிலேயே தெளிவு படுத்தினோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment