Saturday, November 26, 2016

ஈரோட்டில் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டில் வைகோ!

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை 62 ஐ குறிக்கும் வகையில் கேக் தயார் செய்யப்பட்டு, சிறுவர்களுடன் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை, வைகோ, கோவை ராமகிருஷ்னன், புகழேந்தி தன்கராசு உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்நதனர்.

இந்த நிகழ்வானது ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில், இன்று 26-11-20016 சனி கிழமை மாலை சத்தி ரோட்டில் உள்ள கணேஷ் மஹாலில் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில், புகழேந்தி தங்கராசு அவர்கள் எழுதிய "விடுதலை முகவரி", "நெருப்பு பூச்சாண்டி" ஆகிய புத்தகங்களும் வைகோ அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் கியூபா விடுதலைக்கு வித்திட்ட இன உணர்வாளன் பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வைகோவும், இராமகிருட்டிணனும் பிரபாகரனை பயன்படுத்தியவர்கள் அல்ல.  பயன் பட்டவர்கள் என இயக்குநர் புகழேந்தி தங்கராசு புகழாரம் சூடினார்.

தலைவர் வைகோ அவர்களும், ஈழ பயணம், மாவீரர்களின் தியாகம், விடுதலி புலிகளின் வீறுகொண்ட போராட்டம், கோவை ராமகிருஷ்ணன் ஆயுதம் வழங்கியது உள்ளிட்டவற்றை விளக்கி உரையாற்றினார்.

இதில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் என கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மற்ற தமிழீழ உணர்வாளர்களும் கலந்துகொண்டார்கள்.


நிகழ்வு தொடங்கும் முன், இணையதள அணி செயல்வீரர், நாமக்கல் ஈஸ்வரன் அவர்கள், தனது திருமண அழைப்பிதழை தலைவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment