Friday, November 25, 2016

ஓமன் இணையதள அணியின் கலந்தாய்வு கூட்டம்-அல் ஹெயில்!

மறுமலர்ச்சி திமு கழக ஓமன் இணையதள அணி செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டமானது இன்று 25-11-2016 மாலை 3 மணி அளவில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில், அல் ஹெயில் ராகேஷ் அப்பார்ட்மன்டில் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டத்தை கலிங்கப்பட்டி ராஜகுரு ஒருங்கிணைத்திருந்தார். மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை தாங்கினார். விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.

Dr. குழந்தைவேல், பிரேம் ஜாஸ்பர், சக்தி லிங்கம், மணிகண்டன், வெங்கட்ராமன் ஆகியோரும் தங்கள் உணர்வுகளை உரைகளாக தந்தார்கள். மறுமலர்ச்சி மைக்கேல் அவர்கள், இணையதள அணியின் பங்களிப்பையும், தலைவர் வைகோ அவர்களின் தியாங்கங்களையும், கடந்த தேர்தல் பற்றி உரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் மதிமுக வாழ்நாள் உறிப்பினர்களாக 6 ஓமன் இணையதள அணி உறுப்பினர்கள் விண்ணப்பித்தார்கள். மேலும் பல நண்பர்கள் புதிதாக ஓமன் இணையதள அணி உறுப்பினர்களாக உற்சாகமாக இணைந்து கொண்டார்கள். 

நன்றியுரை பேசிய கலிங்கப்பட்டி ராதாகிருஷ்ணன் அவர்கள், புதிதாக உற்சாகமாக இணைந்த உறுப்பினர்களுக்கும், ஓமன் தேசத்தின் பல பகுதிகளிலிருந்து பல மைல்கள் கடந்து வந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதில் கழகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றியும், இணையதளம் மூலமாக, எப்படி நம் பங்களிப்பு இருக்க வேண்டும், புதிய செயல் திட்டம் என்பன போன்றவையும் கலந்துரையாடப்பட்டது. மேலும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

தீர்மானம்:-

1. நினைவில் வாழும் இணையதள அணி நண்பர்களான  ஸ்ரீதர் (அமெரிக்கா), சுரேஷ் (கோவில்பட்டி), அய்யப்பன் காந்தி (அருப்புக்கோட்டை), செல்வா (வடசென்னை) ஆகியோருக்கு மதிமுக தலைமை கழகமான தாயகத்தில், அவர்களது உருவ படத்தினை திறந்து வைத்து, புகழஞ்சலி செலுத்தி கவுரப்படுத்திய தலைமை கழகத்திற்கு ஓமன் மதிமுக இணையதள அணி நன்றியை தெரிவிக்கிறது. மேலும் ஏனைய இணையதள எழுத்தாளர்களை மேடையேற்றி அவர்களையும் கவுரபடுத்தி ஊக்கப்படுத்தி நல் ஆலோசனைகளை வழங்கிய தலைவர் வைகோ அவர்களுக்கும், அதை ஒருங்கிணைத்த இணையதள நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

2. ஈழத்தில் நடந்தது என்ன என்பதை பேசியதற்கான தேச துரோக வழக்கில் தலைவர் வைகோ அவர்களுக்காக வாதாடி விடுதலை வெற்றி தேடி தந்த கழக சட்ட துறை செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.

3. இணையதள அணியினரை அங்கீகரிக்கும் பொருட்டு, இணையத்தில் செயலாற்றும் கழக கண்மணிகளை தேர்ந்தெடுத்து ஊடக விவாதங்களில் பங்கேற்க அனுமதியளித்த தமிழின முதல்வருக்கு நன்றிகளையும். இணையதள ஊடக விவாத குழு நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஓமன் இணையதள அணி தெரிவித்துக்கொள்கிறது.

ஓமன் இணையதள அணி செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் விபரம் வருமாறு,

1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. ம.ப.குழந்தைவேல்
3. ம.ஆனந்த்
4. S. மணிகண்டன்
5. R. கிருஷணகுமார்
6. R. வெங்கட்ராமன்
7. V. வெங்கடாச்சலபதி
8. R. கேசவன்
9. R. கோவிந்தராஜ்
10. இராதாகிருஷ்ணன்
11. R. விஸ்வநாதன்
12. J. பிரேம் ஜாஸ்பர்
13. C. சக்தி லிங்கம்
14. P. ராஜன்
15. M. ஆஸ்டின்
16. V. ரூபன்
17. P. சரவணன்.
18. ராஜகுரு

மேலும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத ஓமன் இணையதள அணி உறுப்பினர்கள், வாட்சப் மற்றும் அலைபேசியின் மூலமாக, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவளித்தார்கள். அவர்களுக்கும் ஓமன் இணையதள அணி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment