இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் "அவர்கள்" என்னும் குறும்படம் இன்று 23-11-2016 மாலை 6 மணிக்கு சென்னை வடபழநியில் உள்ள ஆர் கே வி ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது.
அவர்கள் குறும்படத்தில் பங்கேற்றவர்களுக்கு தலைவர் வைகோ பாராட்டு தெரிவித்தார். திரு.செந்தூரன் அவர்களின் குழந்தையை அரவணைத்து மகிழ்ந்தார் வைகோ.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வைகோ அவர்கள், காற்றுக்கென்ன வேலி','உச்சிதனை முகர்ந்தால் ' வரிசையில் 'அவர்கள்' 8 நிமிடப் படம் ஈழத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். உங்களைப் போன்ற கலைஞர்களின் படைப்புகள் தோல்விக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு ஆறுதல் தருகிறது. உங்கள் பணி தொடரட்டும் என வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில், இந்த குறும்படத்தை இயக்கிய இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், வைகோ, தமிழக வார்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன், ஓவியர் சந்தானம், இயக்குநர் கவுதமன், திருச்சி வேலுசாமி மற்றும் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மேலும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment