நாட்டில் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு, வரவேற்கத்தக்க துணிச்சலான நடவடிக்கை ஆகும். 2015 ஆம் ஆண்டில் சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் சர்வதேச தீர்வு வங்கி (Bank of International settlement) வெளியிட்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சர்வதேச அளவில் பணம் பதுக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு 2.5 விழுக்கhடாக உள்ளது. அதாவது 15200 கோடி டாலர் முதல் 18100கோடி டாலர்களாக உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.8.9 லட்சம் கோடி முதல் ரூ.12 இலட்சம் கோடி ஆகும். பங்குகள் கடன் பத்திரங்கள் மற்றும் வங்கி வைப்புகள் மூலம் பணப் பதுக்கல் நடக்கிறது. இன்னொரு வகையில் மறைக்கப்படும் சொத்துகளின் மதிப்பு 33 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்று மதிப்பிடப்படுகிறது. வரி ஏய்ப்பு, கறுப்புப் பணப் பதுக்கல் மற்றும் அயல்நாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கில் பண பதுக்கல் போன்றவற்றைத் தடுப்பதற்கு இந்திய அரசு மேற்கொண்ட நடடிவக்கைகள் முழு பலனை அளிக்கவில்லை. குளோபல் பினான்ஷியல் இன்டகர்டி என்ற நிறுவனம் இந்தியர்களின் கறுப்புப் பணம் 30 இலட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
கறுப்புப் பண மீட்பு நடவடிக்கைகளால் இதுவரை 1.25 இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்து இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில்தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்து இருப்பது உள்நாட்டில் கொழிக்கும் கறுப்புப் பணத்தை அறவே ஒழித்துக்கட்டப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. மலையளவு குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது மட்டுமின்றி, ஜனநாயகமும் செல்லாக் காசாக்கப்பட்டு வருவதை அனுமதிக்கக் கூடாது. இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வது மட்டுமின்றி, ஒருவேளை உணவுக்கும் அல்லல்படும் துயர நிலைமை நீடிக்கிறது. இன்னொருபுறம் நாட்டின் செல்வ வளம் மிக சொற்பமானவர்களிடம் போய் குவிகிறது.
ஏழ்மையும், வறுமையும், ஏற்றத்தாழ்வுகளும் நீடித்திருக்கின்ற நாட்டில், தவறான பாதையில் பொருளீட்டியவர்கள், கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள், ஆட்சி அதிகhரங்களைப் பயன்படுத்தி வாரிச் சுருட்டியவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், நாட்டு நலனில் அக்கறையுள்ள மக்கள் இதனை வரவேற்கிறார்கள்.
இன்றைய பொருளாதார சூழலில் 500 ரூபாய் நோட்டு புழக்கம் என்பது மிக சாதாரணமாக இருக்கிறது. எனவே பிரதமரின் அறிவிப்பால் சாதாரண மக்கள், தொழில், வர்த்தக நிறுவனங்களை நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்புக்கு உள்ளாகhத வகையில் மத்தி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment