அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.
திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளுள் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் அவர்களது வாழ்க்கைத்துணைவியாக, அவரது மறைவுக்குப் பின்னரும் திராவிடஇயக்கக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தார். தமிழக மகளிர் ஆணையத் தலைவியாகப் பொறுப்பு வகித்துச் சிறப்புச் சேர்த்தார்.
அம்மையாரின் மறைவு, அண்ணா தி.மு.க. தோழர்களுக்கு மட்டும் அல்ல, திராவிட இயக்கத்திற்கும் இழப்பு ஆகும்.
அன்னாரது உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்கள், அதிமுக தோழர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும், நடமாடும் பல்கலை கழகம் நாவலரின் துணைவியார் ஆன்மா இளைப்பாற ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment